சென்னை: மாமல்லபுரத்திற்கு வருகை தந்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், தனது குடும்பத்துடன் புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார். மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தனது மனைவியுடன் நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோயில் வருகை தந்தார். தொடர்ந்து, கடற்கரை கோயில் ஐந்து ரதம், கிருஷ்ணா மண்டபம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து கடற்கரை கோயில் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு அரசின் சுற்றுலா வழிகாட்டி புராதன சின்னங்களின் வரலாறுகள், செதுக்கிய மன்னர்களின் பெயர்கள், தொல்லியல் துறை நிர்வாகத்தால் எப்படி பாதுகாக்கப்படுகிறது என தெளிவாக விளக்கி கூறினார். முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் வருகையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post மாமல்லபுரம் புராதன சின்னங்களை குடும்பத்துடன் கண்டு களித்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் appeared first on Dinakaran.