- சிவா சுப்பிரமணியம் சுவாமி கோயில்
- Kumbabishekam
- சிவா
- சுப்பிரமணியம் சுவாமி கோயில்
- பல்லவ
- அலந்தூர் வேலச்சேரி ரோட், அலந்தூர்
- எண்டோமெண்ட்ஸ் துறை
- கும்பபிசேகம்...
ஆலந்தூர் ஆலந்தூர் வேளச்சேரி சாலையில் உள்ள பழமை வாய்ந்த பல்லவர் கால கல்வெட்டுகள் உள்ள சிவசுப்பிரமணிய சாமி கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த 2022ம் ஆண்டு இறுதியில் பாலாலயம் செய்து திருப்பணிகள் நடந்து வந்தன. கோயில் தாழ்வான பகுதியில் உள்ளதால் நவீன தொழில்நுட்பத்துடன் 5 அடி உயரம் உயர்த்தி நிலை நிறுத்தப்பட்டது. கோயிலில் ₹8 லட்சம் செலவில் கொடி மரம் அமைக்கப்பட்டு கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, துணை மேயர் மகேஷ் குமார், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் ஈன்.சந்திரன், கவுன்சிலர் பிருந்தா முரளி கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிவர் தனலட்சுமி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர்.
The post சிவ சுப்பிரமணிய சாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.
