×

விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலக்குழு கூட்டம்

 

விருதுநகர், மார்ச் 10: விருதுநகர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், டாஸ்மாக் நிர்வாகத்தில் 4,829 கடைகளில் 24 ஆயிரம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். 2017ல் தேசிய, மாநில நெடுஞ்சாலை கடைகளை மூட நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3,300 கடைகளை மூடி அவற்றில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தேர்வு நடத்தி அரசு ஊழியர்களாக நிரந்தரப்படுத்தினர்.

22 ஆண்டுகளாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சுழற்சி முறை பணியிட மாறுதல் முறை நடைமுறைப்படுத்த வேண்டும். பணிநிரந்தம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அனைத்து சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தத்தில் இறங்குவோம் என தெரிவித்தார். உடன் மாவட்ட துணைத்தலைவர் வேல்முருகன், சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா உள்பட பலர் உடனிருந்தனர்.

The post விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : TASMAC Employees' Union State Committee Meeting ,Virudhunagar ,TASMAC ,Employees' Union State ,Committee ,Meeting ,Virudhunagar Marxist Party ,State General Secretary ,Thiruchelvan ,
× RELATED மே 1ம் தேதி டாஸ்மாக் அடைப்பு