- வாசுதேவன்
- ராமேஸ்வரம்
- கமுதி வடக்கு ஒன்றியம்
- நகர அபிவிருத்தி
- அமைச்சர்
- கே. என் நேரு
- நிதி
- மனித வள மேம்பாடு
- தங்கம் தென்னராசு
ராமேஸ்வரம்,மார்ச்10: ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.என் நேரு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்கள் வசந்தமோகன்-சங்கீதா இருவரையும் வாழ்த்தி அன்பளிப்பு வழங்கினார்.
இதில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன், மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் பாஸ்கரன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் நாகநாதன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராஜா, ராமேஸ்வரம் நகர்மன்ற சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் பிரபு, சுரேஷ், வார்டு செயலாளர்கள் கார்கி ராமு, சுரேஷ், ஆனந்த், பெருநாளி போஸ், மணலூர் ராமர், நத்தம் ஒன்றிய கவுன்சிலர் முருகன், கமுதி ராமபாண்டி, முனியசாமி உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.
The post வாசுதேவன் இல்ல திருமண விழா அமைச்சர்கள் பங்கேற்று வாழ்த்து appeared first on Dinakaran.