- கல்லூரிகளுக்கு இடையேயான ஜூடோபியா-2025
- மதுரை
- ஜூடோபியா 2025
- இளங்கலை விலங்கியல் துறை
- மதுரை அமெரிக்கன் கல்லூரி
- திருச்சி
- திண்டிகுல்...
மதுரை, மார்ச் 10: மதுரையில் கல்லூரிகளுக்கு இடையிலான ஜூடோபியா 2025 என்ற கலைப்போட்டி நடைபெற்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இளங்கலை விலங்கியல் துறை வருடத்திற்கு ஒருமுறை அனைத்து கல்லூரிகளுக்கிடையிலான இப்போட்டியை நடத்துகிறது.
இந்த வருடத்தில் மதுரை, திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 கல்லூரிகளிலிருந்து 165 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வினாடி வினா, டான்ஸ், ஸ்கிட், ரங்கோலி, முகப்பூச்சு, போட்டோகிராபி, எதிர்பேச்சு போன்ற 12 போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். இளங்கலை துறைத்தலைவர் வெள்ளதுரை வரவேற்றார். முதுகலை துறைத்தலைவர் ஜாய் சர்மிளா வாழ்த்துரை வழங்கினார்.
இளங்கலை விலங்கியல் சங்கம் தலைவர் ஏஞ்சலின் ஏற்பாடுகளை செய்திருந்தார். நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவ செயலாளர் ஹாரிஸ், நவீன்குமார் நன்றி கூறினர். திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக மாணவர்கள் முதலிடம் பிடித்து சுழற்கோப்பை வென்றனர். மதுரை டோக் பேருமாட்டி கல்லூரி இரண்டாமிடம் பிடித்தது.
The post கல்லூரிகளுக்கு இடையிலான ஜூடோபியா-2025 போட்டி மதுரையில் நடந்தது appeared first on Dinakaran.
