×

கோயில் திருவிழா கொடியேற்றம்

 

அலங்காநல்லூர், மார்ச் 10: பாலமேட்டில் உள்ள பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2ம் தேதி சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் பத்திரகாளியம்மனுக்கு மலர் அலங்காரம், கண் திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் சக்தி கரகம் எடுக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் வாண வேடிக்கையுடன் பத்ரகாளியம்மன் நகர்வலம் வந்தார்.

திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து முளைப்பாரிகள் வைக்கப்பட்டு பெண்கள் கும்மியடித்தனர். திருவிழாவை முன்னிட்டு மார்ச் 17ம் தேதி பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்குவைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர். 18ம் தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post கோயில் திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Temple festival ,Alanganallur ,Panguni Pongal festival ,Bhadrakaliamman ,Mariamman ,Palamet ,
× RELATED விருதுநகர் பொருட்காட்சியில்...