×

நிலக்கோட்டை டூ சென்னை பஸ் சேவை வேண்டும்

 

நிலக்கோட்டை, மார்ச் 10: நிலக்கோட்டையை அருகே சிலுக்குவார்பட்டியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களுக்கு நிலக்கோட்டையில் இருந்து தான் பூ மற்றும் பல்வேறு விவசாய பொருட்கள் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நிலக்கோட்டையில் இருந்து சென்னைக்கும், கோயம்புத்தூருக்கும் தினமும் அரசு பஸ் இயக்க வேண்டும். சிலுக்குவார்பட்டி பஸ் நிலையம் அருகே சுகாதார கழிவறை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post நிலக்கோட்டை டூ சென்னை பஸ் சேவை வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Chennai ,Silukkuvarpatti ,Tamil Nadu ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி