×

ரூ.150ஐ பறிக்க வியாபாரியை தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: போதை வாலிபர் கைது; நண்பருக்கு வலை

நாகர்கோவில்: நாகர்கோவில் வடலிவிளையை சேர்ந்தவர் வேலு (46). மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள பாண்டியன் வீதியில், கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் கிடந்தார். அவரது பைக்கும் எரிந்து கிடந்தது. இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போதை ஆசாமிகள் சிலரை பிடித்து விசாரித்தனர். அப்போது நாகர்கோவில் தட்டான்விளையை சேர்ந்த சுதன் (27) என்பவர், வேலு கொலை செய்யப்பட்ட பகுதியில் தனது கூட்டாளிகளுடன் நின்றது தெரிய வந்தது.

நேற்று முன்தினம் இரவு, தோவாளை அருகே சுதனை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர். விசாரணையில் சுதன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். போதையில் நடந்து சென்ற இவர்கள், பைக்கில் வந்த வேலுவை வழி மறித்து பணம் கேட்டனர். அவர் தர மறுக்கவே பைக்குடன் கீழே தள்ளி, கல்லை எடுத்து தலையில் தாக்கினர். இதில் அவர் மயங்கினார்.

அவரது சட்டை பையில் இருந்த 150 ரூபாயை எடுத்து கொண்டு ஒரு பிளாஸ்டிக் கேனில் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி வந்து வேலு உடலில் ஊற்றி எரித்து கொன்று விட்டு தப்பி உள்ளனர். இதையடுத்து சுதனை கைது செய்த போலீசார் நண்பரை தேடி வருகிறார்கள்.

The post ரூ.150ஐ பறிக்க வியாபாரியை தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: போதை வாலிபர் கைது; நண்பருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Velu ,Vadalivilai ,Pandian Street ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் நடந்த சாலை விபத்தில்...