×

ராஜ்யசபா சீட் விவகாரம்; அதிமுக-தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

அவனியாபுரம்: அதிமுக-தேமுதிக கூட்டணி விரிசலா என்பது கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்து உள்ளார். திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்னையில் இருந்து மதுரை வந்தார். மதுரை விமானநிலையத்தில் அவரிடம் நிருபர்கள், ‘பாஜ உடன் கூட்டணி வைப்பதற்கு மற்ற கட்சிகள் தவம் இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாரே?’ என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
அவர்களது கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. மற்றவர்கள் பேசுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியாது. தற்போது நம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான மூன்று பிரச்னைகள் என்றால் அது மும்மொழி கொள்கை, தொகுதி சீரமைப்பு, மீனவர்கள் பிரச்னை. தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் மொழிதான் நம் தாய்மொழி, உயிர்மொழி. நமது தாய்மொழி தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும். அதுதான் தேமுதிக நிலைப்பாடு. அன்னை மொழி காப்போம், அனைத்து மொழிகளும் கற்போம் என்பதுதான் விஜயகாந்த்தின் வார்த்தை. அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதியை குறைப்பதாக கருத்து இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதனால் அதைப்பற்றி நான் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஒருவேளை நமது எம்பி தொகுதிகளை குறைக்கின்ற வேலையில் ஒன்றிய அரசு ஈடுபட்டால், உறுதியாக தமிழக அரசுடன் சேர்ந்து தமிழகத்திற்காக, தமிழக மக்களுக்காக தேமுதிக போராட உறுதியாக இருக்கிறோம். மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. ஒன்றிய அரசு இதனை தடுக்க வேண்டும். பிரதமர் மோடி, இலங்கைக்கு செல்லும்போது, இனியும் மீனவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாதிருக்க உறுதியான ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். மீனவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘அதிமுகவில் ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே? இதனால் கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா?’ என்ற கேள்விக்கு, ‘‘தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போது எதுவும் சொல்லமுடியாது. ஜோசியம் சொல்லமுடியாது. பொறுத்திருங்கள். நிச்சயமாக அந்த காலம் வரும்போது நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்’’ என்றார். ‘2026ல் அதிமுக – தேமுதிக – பாஜ கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா?’ என்ற கேள்விக்கு, ‘‘காலம் வரும்போது நிச்சயமாக அதற்கான அறிவிப்புகள் வரும்’’ என்றார். ‘ராஜ்யசபா சீட் விவகாரத்தால் அதிமுகவுடன் மன வருத்தம் உள்ளதா? நல்லுறவு தொடர்கிறதா?’ என்றதற்கு, ‘‘அந்த மாதிரி எதுவும் கிடையாது’’ என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

The post ராஜ்யசபா சீட் விவகாரம்; அதிமுக-தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : At-Mugha-Demutika Alliance ,Premalatha Vijayakanth ,Bharpur ,AVANIAPURAM ,PREMALADA VIJAYAKAND ,ADAMUK-DEMUTIKA ALLIANCE ,Demutika ,Secretary General ,Madura ,Chennai ,Dindigul General Meeting ,MADURAI ,AIRPORT ,Rajya Sabha Seat ,Maj-Demuthika Alliance ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி...