- ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
- கோயம்புத்தூர்
- மகாராஷ்டிரா
- கவர்னர்
- ராதாகிருஷ்ணன்
- கோயம்புத்தூர் விமான நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு…
கோவை: கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைத்தான் புதிய தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அநேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும். அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும்போது 3-வது மொழியாக எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் இல்லை. அனைத்து மாநிலத்திற்கும் வரக்கூடிய ஒன்று. வேறு மாநிலத்தவர் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். ஆனால், அவர்கள் மீது தமிழை திணிக்க முடியாது. நாம் எப்படி இந்தியை திணிக்கக்கூடாது என்று கூறுகிறோமோ, அதேபோல மற்ற மாநிலத்தவர் மீதும் தமிழை திணிக்க முடியாது. யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை. எந்த மொழியை யார் படிக்க வேண்டும் என்ற உரிமையை மாணவர்களிடமே விட்டு விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post எந்த மொழியை படிப்பது? மாணவர்களிடமே விட்டுவிடுங்கள்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.