- இந்தியானா வெல்ஸ் டென்னிஸ்
- சபலெங்கா
- கெஸ்லர்
- இந்தியானா வெல்ஸ்
- அரினா சபலெங்கா
- பெலாரஸ்
- மெக்கார்ட்னி கெஸ்லர்
- இந்தியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
- அமெரிக்காவின் கலிபோர்னியா…
- தின மலர்
இண்டியானாவெல்ஸ்: இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று உலகின் நம்பர் 1 வீராங்கனை, பெலாரசின் அரைனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை மெக்கார்ட்னி கெஸ்லரை அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இண்டியானா வெல்ஸ் நகரில், இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டி ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்காவுடன் அமெரிக்க வீராங்கனை மெக்கார்ட்னி கெஸ்லர் மோதினார். முதல் செட் கடும் இழுபறியில் நீடித்தபோதும் கடைசியில் அதை சபலென்கா கைப்பற்றினார். 2வது செட்டை அவரே எளிதில் வசப்படுத்தினார். இதனால், 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 10ம் நிலை வீராங்கனை எம்மா நவரோ, ரோமானியா வீராங்கனை சொரானா மைகேலா கிர்ஸ்டியுடன் மோதினார். இருவரும் சமபலத்தில் மோதியதால், முதல் இரு செட்களில் ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட் எம்மா வசம் வந்தது. இதனால், 3-6, 6-1, 6-6 என்ற செட் கணக்கில் வென்ற அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையரில் ஆஸி வீரர் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டி மினார் ரோமன், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் உடன் மோதினார். அந்த போட்டியில் அற்புத ஆட்டத்திறனை வெளிப்படுத்திய அலெக்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் பெஞ்சமின் டாட் ஷெல்டன், அர்ஜென்டினா வீரர் மரியானோ நவோனி மோதினர். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஷெல்டன் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
The post இண்டியானாவெல்ஸ் டென்னிஸ்: கெஸ்லருக்கு திரில்லர் சபலென்கா வின்னர் appeared first on Dinakaran.