×

15 நாள்களுக்கு பிறகு தெலங்கானா சுரங்க விபத்தில் ஒருவரின் உடல் மீட்பு

நாகர்கர்னூல்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பாறைகளை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்த வந்தபோது கடந்த பிப்ரவரி 22ம் தேதி சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பொறியாளர்கள், 2 ஆப்பரேட்டர்கள் மற்றும் 4 தொழிலாளர்கள் என 8 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறை படையினர் மற்றும் காவல்துறையினர் உள்பட 9 துறைகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 15 நாள்களுக்கு பிறகு சுரங்க விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

The post 15 நாள்களுக்கு பிறகு தெலங்கானா சுரங்க விபத்தில் ஒருவரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,accident ,Nagarkurnool ,Srisailam Left Bank ,Telangana mine ,
× RELATED தெலங்கானாவில் அடுத்தடுத்து சம்பவம்: குரங்குகள் கடித்ததில் மூதாட்டி பலி