×

அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி அன்று திரைக்கு வருகிறது “டபுள் இஸ்மார்ட்” திரைப்படம்

ராம் பொதினேனி, புரி ஜெகன்நாத், சார்மி கவுர், புரி கனெக்ட்ஸ் இணையும் பான் இந்தியா படம், ‘டபுள் இஸ்மார்ட்’. இது அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி அன்று திரைக்கு வருகிறது. வசூலில் சாதனை படைத்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ என்ற படம் திரைக்கு வந்து 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் ராம் பொதினேனி, கமர்ஷியல் இயக்குனர் புரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். புரி கனெக்ட்ஸ் சார்பில் நடிகை சார்மி கவுர், புரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கின்றனர். ‘இஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் தொடர்ச்சியாக, அடுத்த பாகமாக உருவாகும் இப்படத்துக்கு ‘டபுள் இஸ்மார்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விட, இருமடங்கு மாஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கதையை புரி ஜெகன்நாத் எழுதியுள்ளார்.

The post அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி அன்று திரைக்கு வருகிறது “டபுள் இஸ்மார்ட்” திரைப்படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Maha Shivratri ,Ram Podhineni ,Puri Jegannath ,Charmi Kavur ,Pury Connects ,Ban ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED லைகருக்கு பிறகு பூரி ஜெகன்நாத், சார்மி தயாரிக்கும் படம்