×

இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு எஸ்கேப் துபாயில் இருந்து திரும்பிய மென் பொறியாளர் கைது: 4 வருடங்களுக்கு பிறகு சிக்கினார், வடபழனி போலீஸ் நடவடிக்கை

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக உடன் படித்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, துபாய் தப்பி சென்று 4 வருடம் கழித்து சென்னை திரும்பிய மென் பொறியாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், கடலூர் மாவட்டம் லால்பட் பகுதியை சேர்ந்த முகமது (27) என்பவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் தன்னுடன் பி.டெக் படித்த போது பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னை காதலிப்பதாக கூறினார்.

அதன்படி இருவரும் காதலர்களாக ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி வந்தோம். இதற்கிடையே முகமது, சென்னையில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது தன்னையும் அதே நிறுவனத்தில் பணிக்கு சேர்த்தார். அப்போது தன்னை திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்தார். அதன்பிறகு கடந்த 2017ம் ஆண்டு முகமது வேலைக்காக துபாய் சென்றார். அதன் பிறகு அவரது பெற்றோர் 2018ம் ஆண்டு முகமதுவுக்கு வெறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து நான் அவரது பெற்றோரிடம் சென்று கேட்டேன். அப்போது அவர்கள் ரூ.5 லட்சம் மற்றும் மதம் மாறினால் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறினர். ஆனால் அதன் பிறகு திருமணம் செய்து வைக்கவில்ைல. முகமதுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே தன்னை நம்பவைத்து உல்லாசமாக இருந்து ஏமாற்றிய முகமது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது, சத்யாவை நம்ப வைத்து முகமது உல்லாசமாக இருந்து ஏமாற்றியது தெரியவந்தது. அதைதொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், மதமாற்றம் தடை சட்டம் 2002 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். முகமது துபாயில் இருந்ததால், அவருக்கு வடபழனி போலீசார் அனைத்து விமான நிலையத்திற்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தனர்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய முகமதுவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலா மற்றும் எஸ்ஐ செல்விகுழலி ஆகியோர் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு எஸ்கேப் துபாயில் இருந்து திரும்பிய மென் பொறியாளர் கைது: 4 வருடங்களுக்கு பிறகு சிக்கினார், வடபழனி போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Dubai ,Vadapalani ,Chennai ,Sathya ,
× RELATED பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம்...