×

ராகுல் காந்தி அளித்த ஊக்கத்தால் செருப்பு தைக்கும் தொழிலாளி தொழிலதிபராக உயர்ந்தார்: சொந்த பிராண்டை தொடங்குகிறார்

சுல்தான்பூர்: ராகுல் காந்தி அளித்த ஊக்கத்தாலும் உதவியாலும் சாலையோரம் செருப்பு தைத்த தொழிலாளி, இன்று சொந்த பிராண்டை தொடங்கும் அளவுக்கு தொழிலதிபராக மாறியிருக்கிறார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராக உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்றிருந்தார். அப்போது அங்கு நீதிமன்றத்திற்கு வெளியேற சாலையோரம் செருப்பு தைக்கும் தொழிலாளியான ராம்சேத் மோச்சியை சந்தித்த ராகுல் காந்தி அவரிடம் பேசியபடி செருப்பு தைக்க பயிற்சி பெற்றார். அடுத்த நாளே செருப்பு தைக்கும் மின்இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி பரிசாக அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து ராம்சேத் சுல்தான்பூர் முழுவதும் பிரபலமானார். ராகுல் காந்தி தைத்த ஷூவை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்க பலர் முன்வந்த போதும் ராம்சேத் யாருக்கும் தர மறுத்தார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ஜன்பத் இல்லத்தில் ராகுலை நேரில் சென்று ராம்சேத் குடும்பத்துடன் சந்தித்தார். அப்போது, சோனியா, பிரியங்கா காந்திக்கு தனது கையால் தைத்த காலணிகளை பரிசளித்தார். சமீபத்தில் ராம்சேத்தை மும்பைக்கு விமானம் மூலம் ராகுல் அழைத்துச் சென்றார். அங்கு சாமர் ஸ்டூடியோ நிறுவனரும், தோல் தயாரிப்புகள் தொழிலதிபருமான சுதீர் ராஜ்பாரை சந்திக்க வைத்தார்.

இந்த சந்திப்பு ராம்சேத் வாழ்க்கையை மேலும் உயர்த்தி உள்ளது. சாமர் ஸ்டூடியோவில் சுதீர் ராஜ்பார் கற்றுத் தந்த பல விஷயங்களையும் நுணுக்கங்களையும் வைத்து ராம்சேத் தற்போது புதிய கடையும் தனது தொழிலை விரிவுபடுத்தி உள்ளார். ஒற்றை ஆளாக சாலையோரம் செருப்பு தைத்து தினமும் ரூ.100 மட்டுமே சம்பாதித்து வந்த ராம்சேத், ராகுலை சந்தித்த பிறகு தற்போது சில தொழிலாளர்களை வேலைக்கு வைத்து மாதம் சில பல ஆயிரங்களை சம்பாதிக்கிறார். விரைவில் ராம்சேத் மோச்சி என்ற பெயரில் தனி பிராண்ட் செருப்பு, பர்ஸ் பொருட்களை தயாரித்து வெளியிட இருப்பதாகவும் ராம்சேத் கூறி உள்ளார்.

The post ராகுல் காந்தி அளித்த ஊக்கத்தால் செருப்பு தைக்கும் தொழிலாளி தொழிலதிபராக உயர்ந்தார்: சொந்த பிராண்டை தொடங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Sultanpur ,UTTAR PRADESH ,MINISTER ,AMITSHA ,Dinakaran ,
× RELATED சாட்சி ஆஜராகாததால் ராகுல் மீதான அவதூறு வழக்கு ஏப்.28க்கு ஒத்தி வைப்பு