×

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 2 வாரத்துக்குப் பின் ஒருவரின் உடல் மீட்பு

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 2 வாரத்துக்குப் பின் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. துளையிடும் இயந்திரத்தில் முன்பகுதியில் இருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் உடலை மீட்புப் படை மீட்டது.

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பணிகளுக்கு இடையே தோமலபென்ட்டா என்ற பகுதியில் பிப்., 22ல் திடீரென சுரங்க மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டதால் மண் சரிவு ஏற்பட்டது.

இதில் 40க்கும் மேற்பட்டோர் தப்பிய நிலையில் 8 பேர் சிக்கினர். இதையடுத்து ராணுவம், கடற்படை கமாண்டோக்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை தேடுவதற்காக அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மற்றும் எண்டோஸ்கோபி கருவிகள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 2 வாரத்துக்குப் பின் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. துளையிடும் இயந்திரத்தில் முன்பகுதியில் இருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் உடலை மீட்புப் படை மீட்டது.

The post தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 2 வாரத்துக்குப் பின் ஒருவரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,subway crash ,Srisilam subway accident ,Telangana State ,Nagarkurnool District ,Amrabad ,Telangana Subway Crash ,
× RELATED தெலங்கானாவில் அடுத்தடுத்து சம்பவம்: குரங்குகள் கடித்ததில் மூதாட்டி பலி