- சண்முகர்
- வெட்டி வீர் சப்பரம்
- மாசி திருவிழா
- திருச்செந்தூர்
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
- சுவாமி சண்முகர்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 7ம் நாளான இன்று காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சி அளித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் நாள்தோறும் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர். முக்கிய திருநாளான இன்று7ம்நாள் திருவிழாவை முன்னிட்டு, கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
காலை 5 மணியளவில் சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மாலை சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வர உள்ளார். சண்முகர் ஏற்ற தரிசனம் காணும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திருச்செந்தூரில் மாசித் திருவிழாவில் இன்று வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சண்முகர்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.