×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. மும்மொழிக்கொள்கை, நிதிப்பகிர்வு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தநிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை 10.03.2025 திங்கட்கிழமை தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன.
அந்தவகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விவாதித்தார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது. எனவே இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எந்தெந்த பிரச்சினைகளை முன்னெடுத்து பேசவேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் அரசின் கவனத்தை ஈர்த்து பேச இருக்கிறார்கள்.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Under Stalin ,Dimuka M. B. ,Chennai ,Parliamentary Budget Meeting ,MLA ,Anna Adaryalaya ,K. Under Stalin ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...