×

மபியில் வருகிறது புதிய சட்டம் கட்டாய மத மாற்றம் செய்தால் மரண தண்டனை: முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு

போபால்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போபாலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ‘லவ் ஜிஹாத் சம்பவங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் சட்டத்தை எனது அரசு கொண்டு வரும். மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் அனுமதிக்கப்பட மாட்டாது.

எங்கள் அப்பாவி மகள்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்பவர்களை எங்கள் அரசாங்கம் வேடிக்கை பார்க்காது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களை நாங்கள் விடமாட்டோம். அத்தகையவர்களை வாழ அனுமதிக்கக் கூடாது. மத சுதந்திரச் சட்டத்தின் மூலம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அந்த சட்டம் திருத்தப்படும்’என்று கூறினார்.

The post மபியில் வருகிறது புதிய சட்டம் கட்டாய மத மாற்றம் செய்தால் மரண தண்டனை: முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Chief Minister ,Mohan Yadav ,Bhopal ,International Women's Day ,
× RELATED ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸால் கூடுதல் வருவாய்