திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்தவெளி அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. திறந்த வெளி அருங்காட்சியகம் அருகிலேயே 1 மற்றும் 2, 3, 6, 8ம் கட்ட அகழாய்வுகள் நடந்த தளங்களை அருங்காட்சியகமாக மாற்றும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன.23ம் தேதி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நான்கரை ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடியே 69 லட்சத்தில் நவீன அம்சங்களுடன் உலக தரத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே பார்வையாளர்கள் வருகையால் இப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே பணிகள் முடிவடையும் வரை திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தொல்லியல் துறை அறிவித்தது.
The post கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட தடை appeared first on Dinakaran.