×

மேகதாது அணை விவகாரம் கர்நாடகத்தில் தமிழ் சினிமா ஓடாது: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

ஓசூர்: கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அத்திப்பள்ளி பகுதியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, தமிழக தலைவர்கள் அனைவரும் மேகதாதுவுக்கு எதிராக இருக்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்ட எவ்வித ஆட்சேபனையும் இல்லை என, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் தெரிவிக்காவிட்டால், முதல் போராட்டமாக கர்நாடகாவில் தமிழ் சினிமாக்களை ஓட விட மாட்டோம். காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவே, நாங்கள் மேகதாது பகுதியில் அணை கட்டுகிறோம்.

காவிரி, மேகதாது, மாதாயி உள்ளிட்ட அணைகளுக்காக தமிழக, மகாராஷ்டிரா மாநிலங்களை கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கும். தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையாது. அப்படி குறைந்தால் ஒன்றிய அரசிற்கு எதிராக நாங்களும் போராடுவோம். தமிழகத்தில் நடக்கும் இந்தி போராட்டத்தை விட, கர்நாடகா மாநிலத்தில் இந்திக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மேகதாது அணை விவகாரம் கர்நாடகத்தில் தமிழ் சினிமா ஓடாது: வாட்டாள் நாகராஜ் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Megedadu ,Vattal ,Saluvali ,Vattal Party ,Vattal Nagaraj ,Attipalli ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Megedadu, Tamil Nadu… ,Megedadu Dam ,
× RELATED எந்த கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட...