×

லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு: ஆர்டிஓ டிரைவர், ஏஜென்ட் கைது

வல்லம்: மயிலாடுதுறை இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியை சேர்ந்தவர் பாரதி லாரன்ஸ் (32). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து நன்னிலத்திற்கு லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்றார். தஞ்சை – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை தளம் அருகில் பின்னால் வந்த கார், லாரியை வழிமறித்துள்ளது. காரில் இருந்து இறங்கி வந்தவர் டிரைவர் பாரதி லாரன்சிடம் லாரி எங்கிருந்து வருகிறது. பர்மிட் எங்கே என்று கேட்டு, காரில் ஆர்.டி.ஓ. இருக்கிறார், நான் அவரது டிரைவர் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் பாரதி லாரன்ஸ் சட்டைப்பையில் வைத்திருந்த லைசென்ஸ் மற்றும் பணம் ரூ.16,500ஐ எடுத்துக் கொண்டு வேகமாக காரில் ஏறி சென்று விட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், லாரி டிரைவரிடம் இருந்து பணத்தை பறித்தது தஞ்சாவூர் ஆர்.டி.ஓ.,வின் கார் டிரைவர் விவேகானந்தன் மற்றும் ஏஜென்ட் மாதவன் என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு: ஆர்டிஓ டிரைவர், ஏஜென்ட் கைது appeared first on Dinakaran.

Tags : RTO ,Bharathi Lawrence ,Mayiladudhara Iluppat ,Waiapuri Tidal ,Jalli ,Mundinam Pudukkota ,Nannilam ,Thanjai-Pudukkottai National Highway ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது