- ஜோலார்பேட்டை
- மேற்கு வங்கம்
- ஹவுரா
- கர்நாடக
- பெங்களூர்
- திருப்பத்தூர் மாவட்டம்
- ஆம்பூர் ரயில் நிலையம்
- தின மலர்
ஜோலார்பேட்டை: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள யார்டை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜின் மேலே உள்ள மின் ராடு உடைந்து, ரயில் இன்ஜினை இயக்கும் 25 ஆயிரம் வோல்ட் உயரழுத்த மின் கம்பியியும் அறுந்து விழுந்தது.
இதன் காரணமாக ரயில் இன்ஜினுக்கு மின்சாரம் கிடைக்காமல் ரயில் நடுவழியில் நின்றது. இதுகுறித்து இன்ஜின் டிரைவர் தகவலின்படி ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரயில் இன்ஜின் மேலே உடைந்து விழுந்த ராடையும், இதனால் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பியையும் சுமார் ஒரு மணி நேரம் போராடி சீரமைத்தனர். அதன் பிறகு ரயில் மீண்டும் பெங்களூரு புறப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
The post மின் கம்பி அறுந்ததால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில் appeared first on Dinakaran.
