×

மகளிர் தின விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 

பெரம்பலூர், மார்ச் 8: தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணி புரியும் மகளிர் அனைவரும் மகளிர் தின நிகழ்ச்சியை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். எஸ்பி ஆதர்ஷ் பசேரா கலந்து கொண்டார். தேசிய மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடை பெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணி புரியும் மகளிர் அனைவருக்கும் தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். மேலும் மகளிர் அனைவரும் அலுவலகத்தில் பணி புரியும் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம் மதியழகன் மற்றும் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

 

The post மகளிர் தின விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Perambalur ,National Women's Day ,Perambalur District SP ,SP ,Adarsh Basera ,National Women's Day… ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி