- எருதுகள்
- ஜல்லிக்கட்டில்
- மதுரா மேலமிச்செல்பட்டி
- அரியலூர்
- மாவட்டம்
- கலெக்டர்
- ரத்தின சாமி
- நாயகனைப்பிரியாள் மதுரா மேலமிச்சேல்பட்டி
அரியலூர், மார்ச் 8: நாயகனைப்பிரியாள் மதுரா மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் 15ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகள், வீரர்கள் 10ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், நாயகனைப்பிரியாள் மதுரா மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு 15ம் தேதி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுகளுக்கான பதிவுகள், மாடுபிடி வீரர்களுக்கான பதிவுகள் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கான பதிவுகள் ஆகிய அனைத்தும் https://ariyalur.nic.in என்ற இணையதளம் மூலமே பதிவுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தங்களது பதிவுகளை 10ம் தேதி காலை 10 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை பதிவுகளை மேற்கொள்ளலாம்.
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேற்படி இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் சமர்ப்பித்த விபர ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே மேற்படி ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதையல்லாது தனிநபர்கள் மற்றும் வேறுவகையில் பெறப்பட்ட டோக்கன்கள் அனுமதிக்கப்படமாட்டாது.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post மதுரா மேலமைக்கேல்பட்டியில் 15ல் ஜல்லிக்கட்டு இணையத்தில் காளைகள், வீரர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்: கலெக்டர் appeared first on Dinakaran.
