×

போடி அருகே டூவீலர் பள்ளத்தில் கவிழ்ந்து முதியவர் பரிதாப சாவு: 3 பேர் காயம்

 

போடி, மார்ச் 8: போடி அருகே டூவீலர் பள்ளத்தில் கவிழ்ந்து முதியவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர். போடி காந்திஜி காலனி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(64). இவர் தென்னந்தோப்பில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது தம்பி மகன் சந்தோஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துமணி, வினோத்குமார் ஆகியோரை டூவீலரில் ஏற்றிக் கொண்டு ஊத்தாம்பாறை கருப்பசாமி கோயிலில் நடந்த அன்னதான நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்தார்.

தரை தட்டுப்பாலம் அருகே சென்றபோது எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடும்போது நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ், முத்துமணி, வினோத்குமார் ஆகியோர் காயத்துடன் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சீனிவாசன் மனைவி பஞ்சவர்ணம் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். எஸ்.ஐ வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post போடி அருகே டூவீலர் பள்ளத்தில் கவிழ்ந்து முதியவர் பரிதாப சாவு: 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Srinivasan ,Arignar Anna Street, Gandhiji Colony, Bodi ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி