×

ரூ.80 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் கடத்திச் சென்ற ரூ.80 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் மத்திய வருவாய் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலோர காவல்படை உதவியுடன் கப்பலை வழிமறித்த அதிகாரிகள், தூத்துக்குடி பழைய துறைமுகம் கொண்டு வந்து சோதனை செய்தனர். கப்பலில் பதுக்கி வைத்திருந்த ஹசீஸ் எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். கப்பலில் இருந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த 2 பேர் உள்பட 11 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post ரூ.80 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Maldives ,Central Revenue Crime Investigation Division ,Middle East ,Guard ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது