முசிறி: திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிஷ் (25), ஹரிஹரன் (25). இருவரும் இரட்டைச் சகோதரர்கள். கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை 2.3.2025 மற்றும் 3.3.2025 தேதிகளில் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் ஹரிஷ் மற்றும் ஹரிஹரன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைக்குப்பின் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது திருச்சி நாமக்கல் சாலையில் செவந்தலிங்கபுரம் பாலம் அருகே போலீசாரிடமிருந்து இருந்து ஹரிஷ், ஹரிஹரன் இருவரும் தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் இரட்டையர்கள் இருவருக்கும் மாவு கட்டு போட்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
The post இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை இரட்டை சகோதரர்கள் கைது: தப்பியபோது கால் முறிவு appeared first on Dinakaran.
