×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன்: 11ம் தேதி ஆஜராக உத்தரவு

கோவை: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். எஸ்டேட் மேலாளர் நடராஜன் நேற்று முன்தினம் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 8 மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்தநிலையில், முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த சில நாட்களில் மட்டும் 5க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளதால் இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எனவே அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன்: 11ம் தேதி ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Jayalalithaa ,CBCID ,Coimbatore ,Kodanad, Nilgiris district ,Natarajan ,Gandhipuram, Coimbatore ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...