×

ஊட்டி மலைப்பாதையில் டிரைவருக்கு திடீர் மயக்கம் உயிர் தப்பிய 60 பயணிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே மசினகுடியில் இருந்து நேற்று காலை 6.30 மணியளவில் 60 பயணிகளுடன் அரசு பஸ் ஊட்டியை நோக்கி வந்துகொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அசோக்குமார் ஓட்டினார். பஸ் பொக்காபுரம் சந்திப்பை கடந்து மாவனல்லா நோக்கி வந்தபோது டிரைவர் அசோக்குமாருக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் (லோ பிபி) காரணமாக தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குமிங்குமாக வேகமாக சென்றது.

இதனை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சல் போட்டுள்ளனர். லேசான மயக்கத்தில் இருந்த டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை வனத்திற்குள் திருப்பினார். இதனால் சாலையில் இருந்து இறங்கிய பஸ் சுமார் 100 மீட்டர் தூரம் வனத்திற்குள் சென்று நின்றது. டிரைவரின் சாதுர்யமான செயலால் 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சமவெளி சாலையில் இருந்து அபாயகர கல்லட்டி மலைப்பாதையில் ஏறுவதற்கு சில கிமீக்கு முன்னதாக இச்சம்பவம் நடைபெற்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post ஊட்டி மலைப்பாதையில் டிரைவருக்கு திடீர் மயக்கம் உயிர் தப்பிய 60 பயணிகள் appeared first on Dinakaran.

Tags : MOUNTAIN ROAD ,Ooty ,Masinadirp ,Ooty, Neelgiri district ,Asokumar ,Bokhapuram ,Mawanalla ,Dinakaran ,
× RELATED நவீன கழிப்பிடம் கட்டுமான பணிக்காக...