சென்னை: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: சி.பி.எஸ்.இ, ஐ.எஸ்.சி, ஐ.சி.எஸ்.இ, 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அனைத்து தேர்வு மையங்களிலும் தினசரி காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றியை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும். படிக்க தடையில்லா வகையில் அறிவுறுத்தப்படுகிறது.
இதுதவிர, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம், கோடைகாலம் ஆரம்பம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, துணை மின்நிலையங்களை கண்காணிப்பது, அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் பணியாளர்கள் செயல்படுதல், ஊழியர்கள் மற்றும் மின் சாதனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post கோடைகாலம், பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.
