×

குட் விஷன் சேவை அறக்கட்டளை உலக மகளிர் தின விழா

குலசேகரம், மார்ச் 8: பாலின சமத்துவம் மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்கான ”நடவடிக்கைகளை வேகப்படுத்துதல்” எனும் தலைப்பில் உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. குமரியில் ஆற்றூர் அருகே குட்டைக்குழி தனியார் பொறியியல் கல்லூரியில் மிகப் பிரமாண்டமான மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை குட் விஷன் சேவை அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள குட் விஷன் நிறுவனம், தனது 25 ஆண்டுகால சேவையை வெள்ளி விழாவாகக் கொண்டாட இருக்கிறது. மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ஹெச்.சி.எல். நிறுவனத்தின் துணைத்தலைவர் மதி சிவஷங்கர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். இதில் குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் பெண் சாதனையாளர்கள் 15 பேருக்கு பெமினிகான் (FEMINICON) 2025 என்ற விருது வழங்கப்பட இருக்கிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், களரி போன்றவை இதில் நடைபெறுகிறது. குமரி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

The post குட் விஷன் சேவை அறக்கட்டளை உலக மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Good Vision Service Foundation World Women's Day Celebration ,Kulasekaram ,Women's Day ,Gender Equality ,Women's ,Kuttaikuzhi Private Engineering College ,Attur ,Kumari… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா