×

நலத்திட்ட உததீபாவளி சீட்டு மோசடி வழக்கில் உடந்தையாக இருந்த எஸ்ஐ சஸ்பெண்ட்

புதுச்சேரி, மார்ச் 8: புதுச்சேரியில் கோடிக்கணக்கில் நடந்த தீபாவளி சீட்டு பணம் ேமாசடி வழக்கில் உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசனை, டிஜிபி ஷாலினி சிங் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர்கள் பிலோமினா, அவரது கணவர் ஜான்பியர். இந்த தம்பதி புதுவையில் உள்ள அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பல பேரிடம் தீபாவளி சீட்டு நடத்தி பணம் பெற்றுள்ளனர். இதில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து பிலோமினா தம்பதியரை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே பிலோமினா, ஜான்பியர் ஆகியோர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பொதுமக்கள் பலர் அவரிடம் சீட்டு பணம் கட்டி ஏமாந்ததாக புதுவையில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கவர்னர் மாளிகையில் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறை தினங்களில் கார் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்தபோது, பிலோமினா, ஜான்பியர் ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது அவர்கள் தீபாவளி சீட்டு நடத்தி வருவதை தெரிந்து கொண்டு சிற்றரசன், தனக்கு தெரிந்த நபர்களை சீட்டில் சேர்த்துள்ளார். மேலும் சீட்டு கட்டும் நபர்கள் மாதந்தோறும் சிற்றரசனின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையில் மோசடி செய்ததாக பிலோமினா, ஜான்பியர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அறிந்த சிற்றரசன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26ம் தேதி முன்ஜாமீன் பெற்றார்.

தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றத்தில் சிற்றரசன் சரண்டைந்தார். இதையடுத்து புதுச்சேரி போலீசார் சிற்றரசன் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து டிஜிபி ஷாலினி சிங்கிடம் தெரிவித்தனர். ஏற்கனவே இவர் மீது பல்வேறு புகார்கள் காவல்துறை தலைமையகத்திற்கு வந்தன. இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசன் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் டிஜிபிக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து சிற்றரசனை சஸ்பெண்ட் செய்து டிஜிபி ஷாலினிசிங் உத்தரவுவிட்டுள்ளார். தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி வழக்கில் உடந்தையாக இருந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விகளை பெற பொதுமக்கள் முண்டியடித்தபடி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

The post நலத்திட்ட உததீபாவளி சீட்டு மோசடி வழக்கில் உடந்தையாக இருந்த எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : SI ,Puducherry ,DGP ,Shalini Singh ,Sub ,Inspector ,Chitrarasanai ,Philomena ,Kasthuribai Nagar ,Nellithope ,Puducherry… ,Dinakaran ,
× RELATED விபத்தில் கால்கள் செயல் இழப்பு...