- மகளிர் தின கொண்டாட்டம்
- திருப்புத்தூர்
- மகளிர் தினம்
- திருப்புத்தூர் நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரி
- கல்லூரி அதிபர்
- சுரேஷ் பிரபாகர்
- இலவச மெஹந்தி
- தின மலர்
திருப்புத்தூர், மார்ச் 8: திருப்புத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் நேற்று மகளிர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுரேஷ்பிரபாகர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவியர்களுக்கும் இலவசமாக மெஹந்தி போடப்பட்டது. மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவிகள் கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாடினார். ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள் சிவநேசன், சுரேஷ், அனிதா, பூவிழி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.
The post மகளிர் தின விழா appeared first on Dinakaran.
