- கரிவலம் வந்தநல்லூர் கோயில்
- சங்கரன்கோவில்
- கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோவில்
- சங்கரநாராயண சுவாமி கோயில்
- அக்னி தலம்
- தென் தமிழகம்
- தமிழ்
- தமிழ்நாடு
- பால்
- அமைச்சர்
- ஆர். எஸ். ராஜகன்னப்பன்
- நளாயினி…
சங்கரன்கோவில். மார்ச்8: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் அறநிலையத்துறையின் துணை கோயிலாக உள்ளது கரிவலம் வந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோயில். தென் தமிழ்நாட்டின் அக்னி தலம் என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் நளாயினி அம்மா குடும்பத்தினர் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன்திருமலைகுமார், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமண மண்டபத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் பிரபு ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேர்முக உதவியாளர் கண்ணன் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர் சத்யேந்திரன், முருகன், ஸ்தபதி செந்தில், கட்டிட மேற்பார்வையாளர் தங்கதுரை, ஆசைமணி, தினேஷ் ஆகியோர் செய்து இருந்தனர். சாத்தூர் முருகேசன் நன்றி கூறினார்.
The post கரிவலம்வந்தநல்லூர் கோயிலுக்கு புதிய திருமண மண்டபம் appeared first on Dinakaran.