- அமர்கலா
- லங்கா பெண்கள்
- மேடி அட்டநாயகி நெல்சன்
- பெண்கள் அணி
- நியூசிலாந்து பெண்கள் அணி
- ஆடி
- பெண்கள்
- அணி
- நியூசிலாந்து
- பெண்கள்
- மேடி அட்டநாயகி
- தின மலர்
நெல்சன்: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி அபாரமாக ஆடி 78 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் ஆடப்படவில்லை. இந்நிலையில் நெல்சன் நகரில் நேற்று 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற நியூசி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் சூசி பேட்ஸ் 5, ஜார்ஜியா பிளிம்மர் 28 ரன்னில் அவுட்டாகி மோசமான துவக்கத்தை தந்தனர்.
பின் வந்த எம்மா மெக்லியோட் 6, புரூக் ஹேலிடே 6 ரன்னில் அவுட்டாகினர். இருப்பினும் பின்னர் வந்த மேடி கிரீன் அற்புதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 109 பந்துகளில் 100 ரன் குவித்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. இலங்கையின் சமாரி அத்தப்பட்டு 2 விக்கெட் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை மகளிர் களமிறங்கினர்.
துவக்க வீராங்கனைகள் விஷ்மி குனரத்னே 8, கேப்டன் சமாரி அத்தப்பட்டு 11 ரன்னில் வீழ்ந்தனர். பின் வந்தோரில் ஹர்ஷிதா சமரவிக்ரமா சிறப்பாக செயல்பட்டு 59 ரன் எடுத்து அவுட்டானார். மற்றவர்கள் சோபிக்காததால் 46.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 78 ரன் வித்தியாசத்தில் நியூசி அணி அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. சதம் விளாசிய நியூசி வீராங்கனை மேடி கிரீன் ஆட்ட நாயகி. அடுத்த போட்டி, நாளை நடக்கவுள்ளது.
The post இலங்கை மகளிருடன் 2வது ஓடிஐ நியூசி அமர்க்கள வெற்றி: மேடி ஆட்டநாயகி appeared first on Dinakaran.