- ED
- சித்தராமையா
- பெங்களூரு
- அமலாக்க இயக்குநரகம்
- முதல் அமைச்சர்
- பார்வதி
- மைசூர் நகர மேம்பாட்டு
- முடா
- லோக்ஆயுக்தா
- தின மலர்
பெங்களூரு: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) 14 நிலங்களை பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க துறை முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சம்மன் அனுப்பியது. இதற்கிடையில், லோக்ஆயுக்தா இந்த விஷயத்தை விசாரித்து, ஆதாரங்கள் இல்லாதது குறித்து நீதிமன்றத்தில் பி-ரிப்போர்ட் சமர்ப்பித்தது. இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி ஈ.டி. விசாரணையை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா அமர்வு கடந்த 2 வாரங்களாக முழுமையாக விசாரித்து, தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்வதி சித்தராமையா மற்றும் அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோரை விசாரிக்க முடியாது என கூறி, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
The post சித்தராமையா மனைவிக்கு ஈ.டி அனுப்பிய சம்மன் ரத்து appeared first on Dinakaran.
