×

பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!!

பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா சட்டபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய சித்தராமையா அறிவித்தார். அவர் கூறியதாவது;

கல்வி, பொருளாதாரத்திற்கு மன்மோகன் சிங் செய்த பங்களிப்பு அதிகம். இதனால் பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்துள்ளோம் என்றார். கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி வயது மூப்பு காரணமாக, மன்மோகன் சிங் உயிரிழந்தார். கல்வி, பொருளாதாரத்துக்கு அவர் செய்த பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிப்பட்டன. அவரின் பெயரைப் பல்கலைக்கழகத்துக்கு வைப்பது அவருக்கு கர்நாடகம் செய்யும் அஞ்சலியாக கருதப்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழகத்துடன் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு ஆர்.சி. கல்லூரி ஆகியவை உறுப்புக் கல்லூரிகளாக இணைக்கப்படும். கர்நாடகத்தில் ஜைன, பவுத்த, சீக்கிய, கிறிஸ்துவ சமுதாய முன்னேற்றத்துக்கு கர்நாடக பட்ஜெட்டில் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள வக்பு சொந்தமான இடத்தில் மகளிருக்கான 15 கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

The post பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bangalore University ,Dr. ,Manmohan Singh ,Karnataka ,Chief Minister Siddaramaiah ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Karnataka Assembly ,Finance Minister ,Karnataka Assembly.… ,
× RELATED குழந்தைகள் அதிகநேரம் செல்போன் பார்க்கிறார்களா?