சென்னை: ஹோலி பண்டிகையையொட்டி திருப்பூர் வழியாக வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; வடமாநிலங்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடக்கூடிய பண்டிகை ஹோலி. இந்த பண்டிகையை திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டாட வசதியாக திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதற்காக வட மாநில தொழிலாளர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். அங்கு ஹோலி பண்டிகை கொண்டாடி விட்டு மீண்டும் திருப்பூர் திரும்புவார்கள். அதன்படி திருப்பூர் வழியாக இயக்கப்படும் 2 சிறப்பு ரயிகள் பற்றிய விபரம் வருமாறு; திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன்(வண்டி எண்:06073) இடையேயான சிறப்பு ரயில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 14-ம் தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.
இந்த ரயில் திருப்பூருக்கு இரவு 11.55 மணிக்கு வந்து 11.57 மணிக்கு புறப்படும். ஹஜ்ரத் நிஜாமுதீன்-திருவனந்தபுரம்(வண்டி எண்: 06074) சிறப்பு ரயில் வருகிற 10 மற்றும் 17-ம் தேதிகளில் அதிகாலை 4.10 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து புறப்படும். இந்த ரயில் திருப்பூருக்கு 12 மற்றும் 19-ம் தேதிகளில் காலை 4.38 மணிக்கு வந்து 4.40 மணிக்கு புறப்படும். இதேபோல் போத்தனூர்-பிரவுனி(வண்டி எண்: 06055) இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் போத்தனூரில் இருந்து 8 மற்றும் 15-ம் தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு அதிகாலை 12.28 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்படும். பிரவுனி-போத்தனூர்(வண்டி எண்: 06056) சிறப்பு ரயில் வருகிற 11 மற்றும் 18-ம் தேதிகளில் பிரவுனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 13 மற்றும் 20-ம் தேதிகளில் காலை 1.43 மணிக்கு வந்து 1.45 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! appeared first on Dinakaran.