×

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் நீக்கம் செய்யப்பட்டார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு எதிர்வினையாக பாஜ சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக ‘சம கல்வி எங்கள் உரிமை’ என்ற கையெழுத்து இயக்கத்தை சென்னை அமைந்தகரையில் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாஜவினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

இதனிடையே மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் நேற்று நடத்திய கையெழுத்து இயக்கத்தில் விஜயகுமார் கையெழுத்திட்டார். இந்நிலையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் நீக்கம் செய்யப்பட்டார். அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ.  விஜயகுமாரை அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார்.

The post மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : ARCHBISHOP ,L. A. Vijayakumar ,Edappadi Palanisamy ,Chennai ,EU government ,Tamil Nadu ,Edappadi Palanisami ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...