- ராகுல் காந்தி
- மணி சங்கர் அய்யார்
- புது தில்லி
- முன்னாள்
- ராஜீவ் காந்தி
- இங்கிலாந்து
- காங்கிரஸ்
- ராஜீவ் காந்தி...
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இங்கிலாந்து நாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது 2 பல்கலை.யில் அவர் பெயில் ஆனார். ஆனால் அவர் பிரதமரானது எப்படி என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது .இந்த நிலையில் ராஜீவ்காந்தி மகனும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ராகுல்காந்திக்கு வழிகாட்ட நான் 20 ஆண்டுகளாக நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எனது வழிகாட்டலை அவர் விரும்பவில்லை. அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. என் கருத்தை அவர் மீது திணிக்க நான் யார்? ராகுல் காந்தியிடம் சென்று சிலர் என்னைப் பற்றி புகார் செய்கிறார்கள். அதை அவர் எடுத்துக்கொள்கிறார் என்பது எனக்கு புரிகிறது. என்னைச் சந்திக்க அவர் விரும்பவில்லை என்றால் நான் எப்படி அவரைச் சந்திக்க முடியும்? என்றார்.
* காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
ராஜீவ்காந்தி குறித்த மணிசங்கர் அய்யரின் தற்போதைய பேட்டிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
* பைத்தியக்காரன்
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்: மணிசங்கர் அய்யரின் பேட்டிகள் விரக்தியின் உச்சத்தை பிரதிபலிக்கின்றன. ஒரு பைத்தியக்காரன் மட்டுமே ராஜீரவப் பற்றி அப்படிச் சொல்ல முடியும்.
* பா.ஜவின் ஸ்லீப்பர் செல்
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சரண்சிங் சப்ரா: மணிசங்கர் அய்யருக்கு, ராஜீவ்காந்தியை பற்றி தெரியாதா? அவரின் அறிக்கைகள் பா.ஜவின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
The post வழிகாட்ட தயார் தான், ஆனால்… ராகுல்காந்திக்கு என்னை பிடிக்கவில்லை: மணிசங்கர் அய்யர் கருத்து appeared first on Dinakaran.