×

போதை வழக்கில் இருந்து ஷாருக்கான் மகனை விடுவிக்க லஞ்சம் கேட்ட ஐஆர்எஸ் அதிகாரி இடமாற்றம் ரத்து: நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் மண்டல இயக்குனராக பணியாற்றியபோது சமீர் வான்கடே , பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ.25கோடி கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மே 30ம் தேதி வான்கடே மும்பையில் இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தனது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக்கோரிய அவரது மனுக்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. ஆர்யன் கான் மட்டுமின்றி மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மருமகன் போதைப்பொருள் தொடர்பான வழக்கிலும் வான்கடே ஈடுபட்டு இருந்தார். தனக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை எதிர்த்து மத்தியநிர்வாக தீர்ப்பாயத்தில் சமீர் வான்கடே வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சித் மோர், தீர்ப்பாய உறுப்பினர் ராஜீந்தர் காஷ்யப் ஆகியோர் அடங்கிய அமர்வு, வான்கடேவை இடமாற்றம் செய்யும்போது வழிகாட்டுதல்கள் வெளிப்படையாக மீறப்பட்டுள்ளது. எனவே அவரது இடமாற்றம் ரத்து செய்யப்படுகின்றது என்று உத்தரவிட்டனர்.

The post போதை வழக்கில் இருந்து ஷாருக்கான் மகனை விடுவிக்க லஞ்சம் கேட்ட ஐஆர்எஸ் அதிகாரி இடமாற்றம் ரத்து: நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IRS ,Shahrukh Khan ,Administrative Tribunal ,New Delhi ,Sameer Wankhede ,Mumbai Narcotics Control Bureau ,Bollywood ,Aryan Khan ,Dinakaran ,
× RELATED போதை பொருள் விவகாரத்தில் திருப்பம்:...