×

ரயில் பாதை அமைக்கும் பணியால் மதுரை, ராமேஸ்வரம், காரைக்குடி ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு


மதுரை: சென்னையில் நடைபெறும் ரயில் பாதை அமைக்கும் பணியால் 17 ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளதாவது: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரிலிருந்து மதுரைக்கு மார்ச் 6, 7 தேதிகளில் மதியம் 1.45க்கு புறப்பட வேண்டிய வைகை விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். மார்ச் 9 ம் தேதி எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது அதிவிரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும்.

எழும்பூரிலிருந்து புதுச்சேரிக்கு மார்ச் 9ம் தேதி காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில் காலை 7.10 மணிக்கு புறப்படும். காரைக்குடியிலிருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் பல்லவன் ரயில், மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் தாம்பரம் வரையே இயக்கப்படும். மார்ச் 8ம் தேதி நெல்லையிலிருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் நெல்லை அதிவிரைவு ரயில், செங்கல்பட்டு வரையே இயக்கப்படும். எழும்பூரிலிருந்து நெல்லைக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45க்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில் பாதை அமைக்கும் பணியால் மதுரை, ராமேஸ்வரம், காரைக்குடி ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai, Rameswaram ,Karaikudi ,Southern Railway ,Madurai ,Chennai ,Chennai Beach ,Egmore ,Dinakaran ,
× RELATED காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரம் அமைக்க கோரிக்கை