- நீடாமங்கலம்
- நீடாமங்கலம்
- பின்புற பாலடி
- Taladi
- சம்பா
- நீடாமங்கலம் வேளாண்மைக் கோட்டை
- திருவாரூர் மாவட்டம்
நீடாமங்கலம், மார்ச் 6: நீடாமங்கலம் பகுதியில் பின்பட்ட தாளடி இயந்திர அறுவடை மும்முரமாக நடைபெற்றுவருகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 43 ஆயிரம் ஏக்கரில் தாளடி மற்று சம்பா சாகுபடி பணியினை விவசாயிகள் முன் பட்டம், பின் பட்டம் என தொடங்கினர். இதில் முன்பட்ட சாகுபடி செய்த சம்பா மற்று தாளடி நெல் பயிரின் அறுவடை முடிந்து நாற்று விட்டு நடவு பணியினை தொடங்கியுள்ளனர். பின்பட்ட சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது சித்தமல்லி, ராயபுரம், காளாச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயந்திர அறுவடை பணியினை தொடங்கி அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. முன்பட்ட சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி பணியினை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
The post நீடாமங்கலம் பகுதியில் பின்பட்ட தாளடிபயிர் இயந்திர அறுவடை மும்முரம் appeared first on Dinakaran.