தஞ்சாவூர்: அண்மை யில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தால் தங்களின் மாதாந்திர மரு த்துவ செலவு கணிசமாக குறைந்துள்ளது என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழக அரசு கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் அதிக அளவு பயனடையும் வகையில் மக்களை தெக்ஷ மருத்துவம் போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில ்கடந்த பிப்.24 ஆம் தேதி தொடங்கப்பட்டது தான் முதல்வர் மருந்தகங்கள். மக்களுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகள் சலுகை விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்தகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் வட்டத்தில் 8 மருந்தகமும், பூதலூர் வட்டத்தில் 1 மருந்தகமும். திருவையாறு வட்டத்தில் 1 மருந்தகமும்.
கும்பகோணம் வட்டத்தில் 3 மருந்தகமும். பாபநாசம் வட்டத்தில் 3 மருந்தகமும், திருவிடைமருதூர் வட்டத்தில் 4 மருந்தகமும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 7 மருந்தகமும், மதுக்கூர் வட்டத்தில் 2 மருந்தகமும், பேராவூரணி வட்டத்தில் 3 மருந்தகமும் ஆக மொத்தம் 32 மருந்தகங்கள் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் விலையில் 50 % முதல் 75 % வரை குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரிய ங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 முதல்வர் கூட்டுறவு சங்கங்களால் மருந்தகங்களின் மேலாளர்கள், செயலாளர்கள் மற்றும் 24 தனி நபர்களால் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களின் தொழில் முனைவோர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டு முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் மருந்தகத்தால் மாதாந்திர மருத்துவ செலவு குறைகிறது appeared first on Dinakaran.