- ஆத்மா
- தா.பழூர்.
- தா.பழூர்
- சுத்தமல்லி
- வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம்
- விவசாய துறை
- அரியலூர் மாவட்டம்
- உதவி வேளாண் இயக்குநர்
- ரவி.…
- தின மலர்
தா.பழூர், மார்ச் 6: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ் சுத்தமல்லி கிராமத்தில் தரமான விதைத்தேர்வு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் ரவி தலைமையில் நடைபெற்றது. இது குறித்து தொழில்நுட்ப உரையாற்றி பேசுகையில் விதைகளின் முக்கியத்துவம், விதை உற்பத்தி, விதை சான்றுத்தறை வல்லுநர் விதை, ஆதாரவிதை மற்றும் சான்று விதை ஆகியன பற்றி தெளிவாக எடுத்துக்கூறினார். கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் அழகுக்கண்ணன்; பேசுகையில் நெல், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர்களில் செய்யக்கூடிய பல்வேறுவிதமான விதைநேர்த்தி முறைகள் குறித்து கூறினார்.
விதைக்கடினப்படுத்துதல் குறித்து கூறுகையில் கார்பன்டிசம் கொண்டு ரசாயன முறையிலும், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சானகொல்லிகள் கொண்டு இயற்கை முறையிலும், 2 சத உப்புகரைசல், மற்றும் பொட்டாசியம் குளோரைடு மூலம் விதைநேர்த்தி செய்யும் முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் தமிழ்மணி விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உடைமை பதிவேடுகளை வேளாண்மைத்துறை மற்றும் சகோதரத்துறையின் மூலம் நடைப்பெற்று வரும் முகாம்களில் கலந்து கொண்டு தங்களது நிலவிவரங்களை பதிந்து இனிவரும் காலங்களில் அரசின் நலத்திட்டங்களை பெற்றிட விவசாய பதிவு முக்கியம் எனக் கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் லெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.இப்பயிற்சியில் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
The post தா.பழூரில் அட்மா திட்டத்தில் தரமான விதை தேர்வு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.