×

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனு கூட்டம்

அரியலூர், மார்ச் 6: அரியலூர் மாவட்டத்தில் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடந்தது. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. அதன்படி, புதன்கிழமையான நேற்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 26 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் யிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் , உடனடியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur SP Office ,Ariyalur ,Ariyalur district ,District ,Superintendent ,Dr. ,Deepak Sivach ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு...