×

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மார்ச் 6: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைதலைவர் பாலசரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கவிதா, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். அங்கன்வாடி திட்டம் சிறப்பாக செயல்பட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 1993 மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தீனுல்நிசா நன்றி கூறினார்.

The post நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi Workers Association ,Nagapattinam Collectorate ,Nagapattinam ,Tamil Nadu Anganwadi Workers and Helpers Association ,District Vice President ,Balasaraswathy ,District Secretary ,Kavitha ,State Executive Committee… ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்