×

சிவகாசியில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

சிவகாசி, மார்ச் 6: சிவகாசியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். சிவகாசியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரியதாஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, சிவகாசியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் நலிவடைந்து வருகிறது. பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க போராட வேண்டி இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் 18ஆம்படி கருப்பசாமியாக வழித்துணை வருவேன். சிவகாசி பகுதியில் பல இடங்களில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகள் தான் இருக்கிறது. அந்த சாலைகளை புதுப்பிக்கப்படவில்லை என்றார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா, விருதுநகர் மேற்கு மாவட்ட பூத் கமிட்டி தேர்தல் பொறுப்பாளர் ஜான்மகேந்திரன், அதிமுக அம்மா பேரவை மாநில துணைசெயலாளர் சன்சைன் கணேசன், மாவட்ட கழக துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் லட்சுமிநாராயணன், சித்துராஜபுரம் பாலாஜி, மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், அபினேஷ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கார்த்திக், மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் கரைமுருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் செய்திருந்தார்.

The post சிவகாசியில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Sivakasi ,Former Minister ,Rajendra Balaji ,Chief Minister ,District Literary Team ,President ,Mariyadas… ,
× RELATED சிவகாசி ஜிஹெச்சில் கலெக்டர் ஆய்வு