தொண்டி, மார்ச் 6: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கிறிஸ்தவ மக்கள் தவகாலத்தை துவங்கினர். தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இறை இரக்கத்தின் நுழைவாயில் என்று அழைக்கக்கூடிய காரங்காடு புதுமை புகழ் புனித செங்கோல் மாதா திருத்தலம் உள்ளது. அதில் கிறிஸ்தவர்களின் நாற்பது நாள் தவக்காலம் தொடங்குவதை முன்னிட்டு சாம்பல் புதன் திருச்சடங்கு, சிறப்பு திருப்பலியும் அருள் தந்தை அருள் ஜீவா தலைமையில் நடைபெற்றது.
சம்பை புனித செபஸ்தியார் ஆலயத்தில் அருள் தந்தை செல்வகுமார், அருள் தந்தை பாக்கியராஜ், திருத்தொண்டர் ஆனந்த் தலைமையில் சிறப்பு திருப்பலியும், சாம்பல் புதன் திருச்சடங்கையும் நிறைவேற்றினர். தொண்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் அருள் தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
The post தவக்காலம் துவக்கம் appeared first on Dinakaran.